search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிநீர் வினியோகம் நிறுத்தம்"

    • ஊத்தங்கரை ஒன்றியத்தில் உள்ள 34 ஊராட்சிகள் மற்றும் மத்தூர் ஒன்றியத்தில் உள்ள அந்தேரிப்பட்டி, சாமல்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு தினசரி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
    • இன்று (புதன்கிழமை) முதல் வருகிற 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை 3 நாட்களுக்கும் ஒகேனக்கல் குடிநீர் வழங்க இயலாது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், அந்தேரிப்பட்டி, சாமல்பட்டி ஊராட்சிகளுக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

    இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தருமபுரி திட்ட பராமரிப்பு கோட்டம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கீழ் பராமரித்து வரும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஒன்றியத்தில் உள்ள 34 ஊராட்சிகள் மற்றும் மத்தூர் ஒன்றியத்தில் உள்ள அந்தேரிப்பட்டி, சாமல்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு தினசரி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    தற்போது அந்தேரிப்பட்டி அருகில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சாலை விரிவாக்க பணிகளுக்காக குடிநீர் குழாய்களை மாற்றி அமைக்கும் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று (புதன்கிழமை) முதல் வருகிற 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை 3 நாட்களுக்கும் ஒகேனக்கல் குடிநீர் வழங்க இயலாது.

    எனவே மேற்கண்ட பகுதிகளில் இந்த 3 நாட்களுக்கு உள்ளூர் நீர் ஆதாரங்களை பயன்படுத்திக்கொள்ளவும், பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    • பொதுமக்கள் முன்எச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள அறிவுத்தப்படுகிறார்கள்.
    • அவசர தேவைக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ளலாம்.

    சென்னை:

    கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிநடைபெற உள்ளதால் அடையாறு, திருவான்மியூர், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட தென் சென்னையில் நாளை குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நெம்மேலியில் தினமும் 110 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் அடையாறு, வேளச்சேரி, பெசன்ட்நகர், திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் நாளை மறுநாள் காலை 9 மணி வரை குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    இதனால் பொதுமக்கள் முன்எச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள அறிவுத்தப்படுகிறார்கள்.

    மேலும் அவசர தேவைக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ளலாம். இதற்காக அடையாறு பகுதி பொறியாளரை 8144930913 என்ற எண்ணிலும், பெருங்குடி பகுதி பொறியாளரை 8144930914 என்ற எண்ணிலும் சோழிங்க நல்லூர் பகுதி பொறியாளரை 8144930915 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.

    • வ.உ.சி பூங்கா மேல்நிலைத்தொட்டி வளாகத்திற்கு செல்லும் பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
    • பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் 2 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் நகராட்சி ஆணையாளர் புனிதன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது,

    பெரியகுளம் நகராட்சி தலைமை குடிநீர் நீரேற்று நிலையத்தில் இருந்து வ.உ.சி பூங்கா மேல்நிலைத்தொட்டி வளாகத்திற்கு செல்லும் பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

    எனவே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் 16 மற்றும் 17-ந்தேதி காலை மற்றும் மாலை வேளைகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குழாய் அமைக்கும் பணியால் நடவடிக்கை
    • பாலம் புதுப்பித்து கட்டும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.

    கோவை,

    கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண் 99 மற்றும் 100-க்கு உட்பட்ட பகுதிகளுக்கு 1 திட்டத்தின் கீழ் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திடம் இருந்து குடிநீர் பெறப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது.

    மேற்கண்ட குடிநீர் கொண்டு வரும் பிரதான குழாய் சிங்காநல்லூர், வெள்ளலூர் சாலை வழியாக மேட்டூர் கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி வரை அமைக்கப்பட்டு உள்ளது.

    மேற்படி சாலையில் நொய்யல் ஆற்றின் குறுக்கே உள்ள தரைமட்ட பாலம் புதுப்பித்து கட்டும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. இப்பணியின் காரணமாக இப்பாலத்தின் மீது உள்ள குடிநீர் குழாயை மாற்றியமைக்க வேண்டியுள்ளதால் சாலையின் இருபுறமும் புதிதாக வினியோக குழாய் அமைக்கப்பட்டு உள்ளது.

    புதிதாக அமைக்கப்பட்ட குழாயினை ஏற்கனவே உள்ள வினியோக குழாயில் இணைப்பு ஏற்படுத்தும் பொருட்டு வருகிற 9-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை குடிநீர் நிறுத்தம் செய்யப்பட வேண்டியுள்ளது.

    எனவே வார்டு எண் 99 மற்றும் 100-க்கு உட்பட்ட பகுதிகளுக்கு 9-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை 3 தினங்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும் என மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தெரிவித்துள்ளார். 

    குமராட்சி அருகே காலிகுடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    காட்டுமன்னார்கோவில்:

    குமராட்சி அருகே உள்ள ஆட்கொண்டநத்தம் ஊராட்சிக்குட்பட்ட ஊர் ராதாநல்லூர். இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த மக்களுக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 5 நாட்களாக இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

    மேலும் கடந்த சில நாட்களாக குடிநீரில் உவர் தன்மை இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வந்தனர். இது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கிராம மக்கள் தகவல் கொடுத்தனர். இருப்பினும், குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று காலை 8 மணிக்கு ராதாநல்லூர் பஸ் நிறுத்தத்தில் சிதம்பரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த புத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் கிராம மக்கள் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த வரவேண்டும் என கூறினர்.

    பின்னர் இது பற்றி போலீசார் குமராட்சி வட்டார வளர்ச்சி அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவஞானசுந்தரம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை சமாதானப்படுத்தினார். அப்போது விரைவில் குடிநீர் வழங்கவும், புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாணவும் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

    இதை ஏற்ற கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் ½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    ×